திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது சந்தித்தார்.
அப்போது மணப்பாறை நகரம், மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments