திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிப்காட் பகுதியில் வரவுள்ள 2025 ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் முன்னேற்பாடு பணிகளை இன்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விழா முன்னேற்பாடு செய்யப்பட உள்ள மாதிரி வரைபடத்தின் மூலம் அமைச்சருக்கு விளக்கிக் கூறினார்.
பின்னர் விழா நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை ஆணையர் அறிவொளி,
மணப்பாறை யூனியன் சேர்மன் அமிர்தவள்ளி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments