திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுமார் 162 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மின் தூக்கி மற்றும் மருத்துவ உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ட்ரே உள்ளிட்ட நலத்திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். திருச்சிக்கு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவமனை கொண்டுவர முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைவில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும்,
திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மேம்பாட்டு வசதிகள் செய்து தரப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments