திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, பத்தாளப்பேட்டை ஊராட்சி, கீழமாங்காவனத்தில் மாரியம்மாள் வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனை அறிந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி, சேர்மன் சத்யா கோவிந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments