திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் டிவிஎஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (03.09.2024) காலை பயணம் செய்தார்.
அருகில் மண்டல குழு தலைவர் மதிவாணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்( வணிகம்) புகழேந்தி ராஜ், துணை மேலாளர் ( புறநகர்) சாமிநாதன், உதவி மேலாளர் ( தொழில்நுட்பம்) ராஜேந்திரன், மற்றும் பயணிகள் உடன் இருந்தனர்.
அமைச்சர் மகேஸ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை செல்லும் பேருந்தில் டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து ஏறி தன்னுடன் பயணித்த 10 பேருக்கு பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments