திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாலிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அம்மாச்சி மனைவி லட்சுமி (65). இவர் கொழுத்து கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டிட வேலை செய்து மதியம் உணவருந்தி விட்டு அங்குள்ள மரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் மூதாட்டி லட்சுமி வைத்திருந்த சுருக்குப் பையை திருடிச் சென்றனர்.
இந்த மூதாட்டி லட்சுமி வைத்திருந்த சுருக்க பையில் பணம் 2000 ரொக்கம், ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் வெள்ளி கைச்செயின், கழுத்து செயின், மோதிரம் மற்றும் ரேசன் கார்ட், DAD – கார்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் இருந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி லட்சுமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments