திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (11.09.2021) தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி நடைபெற உள்ளது திருச்சி நீதிமன்றங்களில் ஐந்து அமர்வுகளிலும், லால்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம் ஆகிய நீதிமன்றங்கள் தலா ஒரு மக்கள் நீதிமன்றம் அமர்வுகளிலும் என மொத்தம் 10 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதில் வழக்குகள் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரச தீர்வு காணப்படும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையை வழக்குகள் சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், தொழிலாளர் நல தீர்ப்பாயத்தில் நஷ்ட ஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆர்ஜித சம்பந்தப்பட்ட இழப்பீடு போன்ற வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காணப்படும்.
மேலும் வங்கியில் கடன் வகைகள் மற்றும் காசோலை மோசடி வழக்குகள் ஆக மொத்தம் சுமார் 13 ஆயிரத்து 265 வழக்குகளுக்கு மேல் சமரச முறையில் தீர்வு காண பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு ஆன அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) கிளாட்ஸ்டோன் பிளெசட் தாகூர் உத்தரவின் பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தலைமையில் செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments