Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சொன்னதை 15 நிமிடங்களில் செய்த  திருச்சி  மாவட்ட புதிய ஆட்சியர் 

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த .சிவராசு கோயம்புத்தூர் வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக  பிரதீப்குமார் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள், ஆட்சியராக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்…..

மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயம்,கல்வி,மருத்துவம் முன்னுரிமை அளிக்கப்பட்டு, குடிநீர், சாலை வசதி மேம்பாடு மற்றும் தெருவிளக்குகள் சிறப்பான முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மோசமானதை அடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன்.

பட்டா மாறுதல் தொடர்பான காலதாமதத்தை, சிரமங்களை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் கருமுட்டை விவகாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான எந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார் .

திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற 15 நிமிடங்களில் திருச்சி அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் தெரிவித்தது போல் மருத்துவத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறி முதல் பணியாக  திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தது அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *