திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 12 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தின் மூலம், தினமும் சேமிக்கும் பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பள்ளி மாணவர்கள். பெற்றோர்கள் திண்பன்டம் வாங்குவதற்காக தரும் காசுகளை உண்டியலில் சேமித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம், வயநாடு பேரிடருக்கு நிவாரணம் அளிக்க நினைத்த மாணவர்கள் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தை பெற்றோர் ஒப்புதலுடன் ஆசிரியர் மூலமாக வயநாடு நிவாரணத்திற்கு தபால் நிலையம் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் ஆசிரியர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்களிப்பு என 10,668 ரூபாய் நிவாரணமாக வயநாட்டிற்கு மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments