Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் பயணடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4000ஐ தாண்டியது

தாய்ப்பாலைத் திரவத்தங்கம் என்று அழைப்பர். இது மிகையான வார்த்தை இல்லை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அற்புத உணவு. குழந்தைகளுக்கு இதை மருந்தாக கூட பயன்படுத்த இயலும். குழந்தைகளை நோய்த் தொற்றுகளிடம் இருந்து காக்கும். தாய்ப்பால் பெறும் குழந்தைகளிடம் நல்ல மூளை மற்றும் உடல் வளர்ச்சியை காண முடியும். இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறை மாதத்தில் பிறக்கின்றனர். இவர்கள் போதிய தாய்ப்பால் இல்லாமல், ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

இது போன்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி தரக்கூடிய நன்மைகள் பல. அதனால் தாய்ப்பால் வங்கியைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம். இந்த தாய்ப்பால் வங்கியில் அனைத்து தாய்மார்களும் தானம் செய்யலாம். இங்கு தானம் செய்யும் தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தாய்ப்பால் தானமாக கொடுக்க முடியும். அவ்வாறு தானம் செய்யப்படும் தாய்ப்பால் பதப்படுத்தப்படும். 

அவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு எச்.ஐ.வி., மஞ்சள்காமாலை உள்ளிட்ட நோய்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்படும். அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு எந்த ஒரு ‘வைரஸ்’ பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே குழந்தைகளுக்கு கொடுக்கப்படும். இதன்மூலம் தானமாக பெறப்பட்ட தாய்ப்பால் மற்ற குழந்தையை சென்றடைய 4 முதல் 5 நாட்கள் ஆகும். இவ்வாறு தானமாக கொடுக்கப்படும் தாய்ப்பால் மூலம் எடை குறைவாக உள்ள குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு கொடுக்க மிக உதவியாக இருக்கும்.

கொரோனா தொற்று காரணமாக தாய்ப்பால் தானம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் தற்போது  ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் தாய்ப்பால் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையின் தாய்ப்பால் வங்கி பொறுப்பாளர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில்… திருச்சி பேரண்டிங் சர்க்கிள் போன்ற அமைப்புகளும் தாய்ப்பால் தானம் வழங்குவதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகின்றனர். 2015 முதல் செயல்பட்டுவரும் தாய்ப்பால் வங்கியில் இதுவரை 4,367 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனர். 

இதன் மூலம் 415.9 லிட்டர் தாய்ப்பால் கிடைக்கப்பெற்று  2205 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்றார். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி மிகவும் பயனுடையதாக இருக்கிறது.
இந்த தாய்ப்பால் தானத்தின் மூலம் பல குழந்தைகளுடன் தாய்மார்களும் பயனடைந்துள்ளனர். பலர் வந்து தாய்ப்பால் தானம் வழங்கியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கும் நிகழ்வும் மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சி மிக்க தருணமாக இருக்கும் உலகில் தாய்ப்பால் தானமும் சிறந்நது என்றால் அது மிகை ஆகாது என்கிறார் திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் புஷ்ப ஜெயம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *