Wednesday, August 20, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள் போட்டோ எடுக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஓலைச் சுவடிகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. பழமையான இந்த கோவிலின் தல வரலாறு, உற்சவங்கள் மற்றும் ஆகம விதிகளின் படியான வழிப்பாட்டு முறைகள், ஓலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

நுாற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமைந்த ஓலைச் சுவடிகள் னைத்தும், கோவில் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஸ்ரீரங்கம் கோவில் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறுகையில் பனை ஓலைகளில் எழுதி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள், இயற்கை சீற்றங்களால் அழிந்து போகாமல் இருக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், பாதுகாப்பாக போட்டோ எடுக்கப்பட்டு, அவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுந்தர காண்டம், பாகவதம், ஶ்ரீபாகவதம், பெரியாழ்வார், திருமொழி, வியாக்கியானம், துலா காவிரி புராணம் ஆகிய 5 தலைப்புகளில் தலா சுமார் 250 ஓலைச்சுவடிகள் 6 கட்டுகளாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *