கரூர் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றுள்ளார்.
காரை கோவில் தெற்கு வாசல் அருகே பக்தர்கள் நடைபாதையில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக காரை அஜாக்கிரதையாக ரிவர்ஸ் எடுத்து திருப்பியுள்ளார். அப்போது தெற்கு வாசல் அருகே நடைபாதை ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பக்தர் ஒருவரின் தலையில் கார் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் அந்த பக்தர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பக்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து உரிமையாளர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments