Wednesday, August 27, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எப்போது தேர்தல் வரும் என நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்- திருச்சியில் தமிழ்மகன் உசேன் பேட்டி

விடியா திமுக அரசின் ஆட்சியில் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் மீண்டும் அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களுக்கு அதிமுக அவை தலைவரும், முன்னாள் வஃக்பு வாரிய தலைவருமான தமிழ் மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை எனும் துவாவின் மூலம் தமிழகத்தில் இதுவரை 31 மாவட்டங்களில் ஆண்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, 32 வது மாவட்டமாக அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம், மணிகண்டம் தெற்கு ஒன்றியம் சார்பில், கழக அவைத்தலைவர், முன்னாள் வஃக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி k பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட திருச்சி இனாம்குளத்தூரில் உள்ள சையது உல் நத்தர் அவுலியா தர்காவில், இங்குள்ள அவுலியாக்கள் மூலம் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்க்கொள்ளப்பட்டது.

திருச்சி, இனாம்குளத்தூரில், 300 ஆண்டுகளுக்கு முன்பு சையது உல் நத்தர் அவுலியா என்பவர் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தன் இன்னுயிரை தந்தவர். அவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காதர் மைதின் என்பவரது மகன் காதர் மஸ்தான் வம்சாவளியில் நூர்ஜஹான் பீவி குடும்பத்தார் இந்த தர்காவை பாரம்பரியமாக பாதுகாத்து வருகின்றனர்.

இந்த சிறப்புமிகு தர்காவில் பல்வேறு வேண்டுதல்களை முன் வைக்கும் பொழுது அது நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த தர்காவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவுலியாக்கள் மூலம் தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் MLA பரமேஸ்வரி முருகன், சிறுபான்மையினர் மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மணிகண்டன் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ் மகன் உசேன்…மீண்டும் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

32 வது மாவட்டமாக திருச்சி மாவட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை எனும் துவா மேற்கொண்டு வருகிறேன். சிறுபான்மையின மக்களுக்கு எவ்வளவோ நல்ல பல திட்டங்களை தந்தவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி கே.பழனிச்சாமி வஃக்பு வாரியத்திற்கு உட்பட்ட 6800 பள்ளிவாசல்களில், நமலான் நோன்பு கஞ்சி வழங்க 3423 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பின் எடப்பாடி முதல்வராக இருக்கும்பொழுது எங்களது கோரிக்கையை ஏற்று, பள்ளிவாசல்களுக்கு கூடுதலாக 4623 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக தந்த அரசு அதிமுக அரசு. இந்திய வரலாற்றில், ஒரு இஸ்லாமியருக்கு தலைமை பதவி அளித்த பெருமை. எந்த கட்சிக்கும், அந்த வரலாறு கிடையாது, அதிமுக விற்கு தான் அந்த வரலாறு உண்டு என்றார்.

இந்த விடியா அரசு மக்களை வஞ்சிக்கிறது. இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எப்போது தேர்தல் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்படி சட்டப்பேரவை தேர்தல் வந்தால் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி விட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *