மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மாநில முழுவதும் வாக்காளர்கள் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பரப்புரை நடைபெற்றது. திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் 45 பேருக்கு மேல் ரத்தத்தை தானமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் வாக்களிப்போம் , வாக்களிப்போம், தவறாது வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசுங்களை மூலம் பரப்புரை செய்யும் விதமாக பொன்மலை வார சந்தையில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடந்தது.
வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.
எனது வாக்கு எனது உரிமை என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில துணைச செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், மகளிர் அணி நிர்வாகி ந.தரணி, பண்பாளர்கள் மே.க.கோட்டை ஜெயகுமார், நீ.தயானந்த், தங்கராஜ் , இளங்கோ, பெ.ரஞ்சித், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments