Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

The perfect கல்யாணம் – A premier wedding event திருச்சியில் ஓர் புதிய தொடக்கத்தின் கண்காட்சி திருவிழா

திருமணம் என்றாலே கனவுத்திருவிழா தான். இன்றைய கால இளைஞர்கள் தங்களுடைய  திருமணம் ஆனது ஒரு மாபெரும் விழாவை போன்று இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். எல்லாவற்றிலும் புதுமையை ஒரு தேவையாய் மாற்றியிருக்கிறது இன்றைய கால பழக்கவழக்கங்கள்.

இதனை பிரம்மாண்டமாக்கி”திருமண நிகழ்வு அமைப்புகள்” உருவாகியிருக்கின்றன. 
மேடை அலங்காரம்,  திருமண மணப்பெண், மணமகனின் ஆடைகள், சிகை அலங்காரம், ஆபரணங்கள், ஒப்பணை  அலங்காரம், புகைப்படங்கள் போன்றவற்றில்   அதிகமாய் கவனம் செலுத்தும் தலைமுறைகளுக்கு  இதுபோன்ற திருமண அமைப்புகள் உதவுகின்றன.  திருச்சியில் “THE PERFECT கல்யாணம் ” அமைப்பு தொடக்க விழாவாக மார்ச் 26&27 இரண்டு நாட்கள் The premier wedding event என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தனர். 

                             Advertisement
Made in trichy என்ற கருத்தாக்கத்தில் திருச்சியை சேர்ந்த. Belmont (மணமகன் ஆடைகள் பிரிவு),
wedding graphy(studio artifex),
bridal makover (pretty queen unisex salon), 
fassion Jewelry (maalyaa),
wedding cake (cake doe)
keerthi packaging, ஆகியவர்கள் இணைந்து இந்த இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் பங்குக்கொண்ட தேவி முத்துக்குமார் கூறுகையில், மணப்பெண் ஆடை வடிமைப்பாளாராக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளேன்.  திருச்சியில் இது ஒரு புதிய முயற்சி.எங்களுடைய பிரத்யேக வடிவமைப்புகளை காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எங்கள் திறமையை வெளிப்படுத்திய ஒரு புதிய தளமாக அமைந்துள்ளது என்கிறார்.  நிகழ்வில்  வயலின் இசைக்கலைஞர்  கமல்ஹாசன் மற்றும் இளம் பாடகி சமிகாஷா ஸ்ரீ கந்தன் இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *