திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நல்லாம்பிள்ளையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அடிக்கடி மதுபோதையில் குடிநீர் ஆப்ரேட்டர் வேலை கேட்டு ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த மாரியப்பன், அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி நின்று ஊராட்சியில் ஆப்ரேட்டர் வேலை தரவில்லை என்றால் குடிநீரில் விஷம் கலந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு மணப்பாறை காவல் நிலையத்திலும், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்க குவிந்ததால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
வட்டாட்சியர் உத்தரவின் பேரில் மரியப்பனை விசாரணைக்கு அழைத்து வர சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஊருக்குள் சென்று முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல்நிலைத்தினை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் எம்.லஜபதிராஜ், சம்பந்தபட்ட நபர் மதுபோதையில் இருப்பதால், அவரை காலையில் காவல்நிலையம் அழைத்து வந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments