திருச்சி மாநகரில் கடந்த 26.02.22-ஆம் தேதி அரியமங்கலத்தில் உள்ள ராமலிங்கம் அரசு அனுமதியோ, உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் எதிரி அசன்அலி வயது 24 என்பவர் மீது அரியமங்கலம் நிலையத்தில் வழக்குபதிவு செய்தும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 போதை மாத்திரைகள் மற்றும் 01 போதை மருந்து பாட்டில்களை கைப்பற்றியும், எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டர்.
எனவே, மேற்படி எதிரி அசன்அலி தொடர்ந்து போதை மாத்திரை விற்று இளைஞர் சமுதாயத்தை கெடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து. திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் (மருந்து சரக்கு குற்றவாளிகள்) தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும்மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாதகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments