Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பெரியாரை கைது செய்ய சொன்னவர் கருணாநிதி -அர்ஜீன் சம்பத் திருச்சியில் பேட்டி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீரமணி  சந்தித்து திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்கப்படும் என அறிவித்து அனுமதி அளித்தார்.

இதற்க்கு தடை விதிக்கக் கோரி  இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்….வாழ்நாள்‌ முழுக்க இந்து கடவுள்களை இழிவு படுத்தி,இந்து தெய்வ நம்பிக்கைகளை புண்படுத்தி பிரச்சாரம் செய்தவர் ஈவேரா.திமுக ஆட்சி வந்தவுடன் வீரமணி‌ அவருடன் ஒட்டிக் கொண்டார். அவருடைய திராவிடர் கழகம்,பெரியார் மணியம்மை அறக்கட்டளையில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாகவும் அதை அவரும் அவரது மகன் அன்பும் நிர்வகிப்பதாகவும்,அதையெல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் திருச்சியில் ஈவேரா- விற்க்கு சிலை அமைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. மு க ஸ்டாலின் அவர்களது வீட்டிலேயே இறைநம்பிக்கை கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை சீர் குலைக்கும் வண்ணம் ஈவேராவின் பிறந்தநாளை சமூக நீதி நாள் என அறிவித்திருக்கிறார்கள்.
படித்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் முட்டாள்கள் தான் எனக்கு வேண்டும் என்றும் சொன்னவர் ஈவேரா,சுதந்திர‌ நாளை கருப்பு கொடி ஏற்றி கொண்டாடியவர் ஈவேரா இவரை எப்படி சமூகநீதி காத்தவர் என்று சொல்கிறீர்கள்.

ஈ வெ ரா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய சொல்லி சட்டசபையில் பேசியவர் கருணாநிதி.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்ரீரங்கத்தில்  ஈவேரா  சிலை வைத்தது போல் மீண்டும் செய்ய பார்க்கிறார்கள்.திமுகவில் ஒரு கோடி இந்து பக்தர்கள் இருக்கிறார்கள். ஈவேரா சிலை  வைத்தால் திமுகவினர் மனம் புண்படும் என கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *