உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவில்லை என்று தான் பொதுமக்கள் என்னிடம் குற்றச்சாட்டை முன் வைத்தனர் -முசிறி திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பேட்டி
முசிறி தொகுதிக்குட்பட்ட மேல வெள்ளூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலையை அர்ப்பணிக்கும் நிகழ்விற்கு நேற்று முசிறி எம்எல்ஏ சென்றிருந்த நிலையில் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு கட்டப்பட்ட கழிப்பறைக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பொதுமக்கள் நான் தொகுதிக்கு வரவில்லை என கூறவில்லை, உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் வரவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து தரவில்லை எனவே செய்து தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர், முசிறி தொகுதியில் பொது மக்களுக்கான சாலை, குடிநீர் வசதி, பால வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து தொடர்ந்து தொகுதிக்கு செல்கிறேன்.
எனவே தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், வேண்டுமெனில் உங்களை என் தொகுதிக்கு அழைத்துச் செல்கிறேன் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொள்ளுங்கள் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments