Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கொரோனா அச்சத்தால் வீடுகளிலேயே ஓணம் பண்டிகை கொண்டாடிய பொதுமக்கள்

கேரள மாநிலத்திலும், தென்தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் பண்டிகை  ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும்,

இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

உறவினர்களோடு இணைந்து பூக்கோலமிட்டு ஆடல், பாடல் என்று மகிழ்ச்சியாக தங்கள் பண்டிகையை கொண்டாடும் திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று. கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தங்களது இல்லங்களில் கொண்டாடி வருகின்றனர். சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும்  ஓணம் பண்டிகையில் தமிழ் மக்களோடு இணைந்து திருச்சியில் இருக்கும் கேரள மக்கள் தங்களது இல்லங்களில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு “கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. 

ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான “ஓண சாத்யா” என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். ஊரடங்கு காலகட்டத்தில்  பாதுகாப்போடு விழாக்களை கொண்டாடியதோடு அருகில் இருக்கும் நண்பர்களுக்கு தங்கள் பாரம்பரிய உணவு முறைகளை விருந்தளித்து விழாவை கொண்டாடி உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *