Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

யாரோடு யார் என்ற கேள்வி… விதிதான் விடை சொல்ல வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சில முரண் பட ஆரம்பித்திருக்கின்றன. மதிமுக, 6 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என்று கேட்கிறது. அதிமுகவுடனும், பாஜவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாமகவும், ஒரு ராஜ்யசபா சீட் கேட்கிறது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவோ ஒருபடி மேலே போய், 14 நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பவருடன்தான் கூட்டணி என்று கறாராக அறிவித்து விட்டார்.

திமுக அரசு பொறுப்பேற்ற, 3 ஆண்டுகளில் இதுவரை ஒரு புதிய மருத்துவக் கல்லூரிகளை கூட தொடங்கவில்லை. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள, 32 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தவில்லை. மருத்துவக்கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டு விட்டது. மருத்துவக்கல்லூரி இல்லாத, 6 மாவட்டங்களிலும் புதிய கல்லூரிகளை தமிழக அரசே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் சீட் வேண்டும் என்று திமுகவிடம் மனிதநேய மக்கள் கட்சி கேட்கிறது. கடந்தமுறை திமுக கூட்டணியில் ஒன்றில் தன்னுடைய சொந்த சின்னத்திலும் ஒன்றில் உதயசூரியன் சின்னத்திலும் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் எங்களுக்கு இம்முறை சற்று அதிகமாக வேண்டும் அத்தோடு எங்கள் சின்னத்தில் தான் நிற்போம் என்று சீறுகிறார்கள், இதே நிலையைதான் மதிமுகவும் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

ராஜ்யசபாவிற்கு தற்பொழுது தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் எவருடைய பதவியும் காலியாகவில்லை இப்படி இவர்கள் ராஜ்யசபா சீட் கேட்பதற்கு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பது தெரிந்துதான், என திமுக தலைமை கணக்கு போடுகிறது இனி ராஜ்யசபா சீட் வேண்டும் என்றாலும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் முடிந்துதான் என்பதை எந்த கட்சியும் சிந்திக்கவில்லை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன் ’சன்கள்’ சட்டசபை தேர்தலுக்கு இப்போதேவா துண்டை போடுவது என கிண்டலடிக்கின்றனர் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் சில தொலைக்காட்சிகள் கூட்டணியே முடிவடையாத நிலையில் இந்த கட்சிக்கு இத்தனை இடங்கள் எனக்கணக்கு போடுகின்றன, எம்பா இலையை முதல்ல போடட்டும்பா அப்புறமா பரிமாறுங்க யார் வேண்டாம் என்கிறார்கள் மக்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *