திருச்சி லால்குடி அடுத்த தண்டாங்கோரை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி கோவிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் செயல் அலுவலர் புனிதா உத்தரவிட்டார். இந்நிலையில் கோயிலின் உபயதாரர்களில் ஒருவரும் தேவராஜன் (75) என்பவரை, ரௌடி கும்பல் ஒன்று அருவாளை கொண்டு மிரட்டி, அடித்து உதைத்து தாக்கியுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்ற தேவராஜன் தூண்டியதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் வேலை செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து, பொதுமக்களுக்கு மத்தியில், நடுரோட்டில் வைத்து, இச்சம்பவம் நடந்துள்ளது.
இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments