கோடை காலம் தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் வெயில் 105 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைத்தது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை பெய்ததால் திருச்சி மக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்தும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மாநகரில் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடியது. குறிப்பாக பள்ளி கல்லூரிகள் முடியும் நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்ல பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் திருச்சி குளிர்ந்தது. இந்த நிலையில் மழை பெய்து நின்ற சிறிது நேரத்தில் திருச்சி கிழக்கு திசை பகுதியில் வானவில் தோன்றி வர்ணஜாலமாக காட்சியளித்தது. இதனை திருச்சி மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். திருச்சியை அழகாக மாற்றிய இந்த வானவில்லை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Trending
20 June, 2024
|
3.8k


திருச்சி மாநகரை அழகாக்கிய வானவில்

← Previous News
திருச்சி மாவட்டத்தில் நேற்று (19.06.2024) பெய்த மழை அளவு விவரம்
Recommended Posts
Popular Posts
Stay Connected
12345 Likes
Like
325 Followers
Follow
325 Subscribers
Subscribe
325 Followers
Follow
123 Connections
Join
123 Connections
Follow
123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- Trending
Trending
|
23 Feb, 2025
|
1.7k


லெவன் படத்திற்காக டி இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி ஆடி அசத்தும் தமுகு பாடல்
தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான…
Trending
|
29 Jan, 2025
|
3.2k


சாரண – சாரணியருக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண –…
Trending
|
26 Jan, 2025
|
1.9k


மேயர் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்
கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட,…
Comments