Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம் –  திருச்சியில் பழ.நெடுமாறன் பேட்டி

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர்தின நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி தலைமையில் மதவாத அரசியலும் – பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில், நினைவுப் பேருரை நிகழ்த்தவும், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கைது கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர்…. அகில இந்திய துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக ஆளுநர்… இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் இருப்பது தான் சரி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கல்வித்திட்டம் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் இந்தியாவின் அரசியல் சட்ட வரலாறு தெரியாமல் பேசியுள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி, பொதுப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டது, இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றம் கூட்டி விவாதிக்க வேண்டிய பிரச்சனையை, அலங்கார பதவியில் உள்ள ஆளுநர் கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர், தமிழக ஆளுநரின் இந்த போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்.

30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்கிறேன், தமிழக முதல்வர் மீதமுள்ள 6 பேருக்கும் ஜாமீன் விடுதலை கிடைக்க சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்துக் கொண்டார். மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அரசியல் மற்றும்  இஸ்லாமிய சிறைக் கைதிகளை பிரச்சனைகளையும் கனிவுடன் பரிசீலித்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மீதமுள்ள 6 பேருக்கும் விடுதலை கிடைக்கும், அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1983ல் இருந்து தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் வேட்டையாடி வருகின்றனர், இதுவரைக்கும் 700க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பலர் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நமது தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு மற்றும் கடலோர காவல்படை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, சிங்களக் கடற்படையினருக்கு எதிரான நடவடிக்கையை இந்திய அரசு மற்றும் கடலோர காவல்படை எடுக்காதது என்பது தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் ஆக கருதவில்லை. தமிழக மீனவர்களை என்றைக்கு இந்திய குடிமக்களாக கருதவில்லையோ, அதற்குப் பிறகு நாம் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டம் வந்துவிட்டது, அந்த முடிவை தமிழக மக்கள் எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது எதேச்சை அதிகார போக்குக்கு நாட்டை அழைத்துச் செல்லும். இது மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காத போக்கு.

நான்கு மாநிலத் தேர்தல் வெற்றி என்பது ஆட்சி அதிகாரம், பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே காரணம். பாஜகவிற்கு எதிராக ஓரணி உருவாக்க இதுவரையிலும் முன்வரவில்லை. பாஜகவுக்கு எதிராக வலுவான அணி அமைக்க அனைத்து மாநிலக் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *