Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி – வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிசந்திரன்(57) அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ப்ரியதர்ஷினி, கரம்பயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி   ப்ரியதர்ஷினிக்கு, வாந்தி, கண் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தனியார் ஆஸ்பத்திரியிலும் தொடர் சிகிச்சை பெற்றார். 

இதனையடுத்து  திருச்சி தென்னூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு செப்டம்பர்  மாதம் 22-ந் தேதி நள்ளிரவு சேர்த்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குபிறகு அவரது மூளைப் பகுதியில் ரத்தம் உறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சேமிப்பிலிருந்த தொகை ரூ.5 லட்சம் வரையில் செலவாகிவிட்டது.  

மேலும் மருத்துவ செலவுக்கு பணம் தேவைபட்டது என்ன செய்வது என்று தெரியாமல் மனவேதனையில் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். அப்போது மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஐஜி பாலகிருஷ்ணனுக்கு இத்தகவல் அனைத்தும் தெரியவந்தது. உடனடியாக அந்த தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களை சந்தித்து பிரியதர்ஷினி உடல் நிலை குறித்து கேட்டறிந்தார் என்ன செலவாகும் நான் பொறுப்பு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அனைத்தையும் செய்யுங்கள் நான் பொறுப்பு என்று உத்தரவாதம் கொடுத்து விட்டு வந்தார்.

ஒரு வார காலத்தில் ப்ரியதர்ஷினி சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பவும் வழி வகை செய்துள்ளார். கடவுளின் மறு உருவம் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் என  ஏட்டு ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஏட்டு ரவிச்சந்திரன் 1989-90-ம் ஆண்டில் போலீஸ் பணிக்கு வந்தவர். அந்த பேட்ஜில் பணிக்குச் சேர்ந்த பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் துறையில் பணியாற்றி வருகின்றனர். அவருடன் பணியாற்றிய சக காவல்துறை நண்பர்களும் தங்களால் இயன்ற பண உதவி ரூபாய் 57 ஆயிரமும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் வாயிலாக கொடுத்து உதவியுள்ளனர். அவர்கள் தங்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் விவரங்களை ஆடியோவாகவும் ஐஜிக்கு பாராட்டு தெரிவித்தும், புகழ்ந்தும் வருகின்றனர். 

காவல்துறை மக்களின் காவலன் என பல்வேறு வாசகங்கள் பலகையில் எழுதி வைத்து பொதுமக்களுக்கு சேவகனாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உதவ யாருமில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்தது. இதனை தகர்த்தெறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் உங்களுக்காக நான் இருக்கிறேன் உங்கள் குறைகளை தீர்ப்பேன் உங்களுடன் இருப்பேன் என்று நேரடியாக சென்று ஒரு உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

அக்குடும்பம் மத்திய மண்டல காவல் துறையை கடவுளாக வணங்க தான் செய்யும் என்பது இவர்களின் பதிவிலிருந்து தெரிகிறது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று  காவல் உயர் அதிகாரி அதிகார தோரணையில்லாமல் தன்னுள் ஒரு மனிதநேயம் இருக்கிறது என்பதை என்பதை புரிய வைத்துள்ளார் மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்களுடன் சல்யூட்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *