திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பைகளை அகற்றுதல், தூய்மை பணியிலும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் துப்புரவு பணியாளர்களை ஒருமையிலும், தரக்குறைவுவும் பேசியதாகவும் கூறி ஏராளமான துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என அவர் உறுதி கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments