திருச்சி மாவட்டம் கிழக்கு வட்டாட்சியர் வாகன ஓட்டுநராக சகாயராஜ் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும், டேனியல் என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஓட்டுநராக சகாயராஜூக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த (01.10.2023) அன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மறைந்த மறைந்த ஓட்டுநர் சகாயராஜ் குடும்பத்திற்கு, அனைத்து மாவட்ட அரசு வாகன ஓட்டுநர்களிடமிருந்து பெற்ற 1,50,000/- பணத்தை சகாயராஜ்
அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் மு.பழனிச்சாமி, நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஓட்டுநர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments