Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

விவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க மூன்றாம் கட்ட பயணம்!

“சுழன்றும் ஏர் பின்னது உலகு” என்றால் அது விவசாயத் தொழில் தான். இயற்கையால் படைக்கப்பட்டதை இறைவனால் பராமரிக்க அனுப்பப்பட்டவர்கள் தான் இந்த விவசாயிகள். சில நேரங்களில் இயற்கையால் உருவாக்கப்பட்ட சீற்றங்களால் சில மன வேதனைகளை விவசாயிகள் அடைந்தாலும் துவண்டு விடுவதில்லை.

Advertisement

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கஜா புயலால் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இவ்வாறு சீற்றங்களால் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வை நகர்த்தும் விவசாயிகளுக்கு சிறு உதவியாக திருச்சி அமைப்பினர் சார்பாக தென்னங் கன்றுகள் மூன்றாம் கட்டமாக இன்று வழங்கப்பட்டது.

Shine TREEchy மற்றும் Tasa IT Services நிறுவனத்தின் சார்பாக விவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க தென்னையை இழந்த விவசாயிகளுக்காக மூன்றாம் கட்டமாக தென்னை திருவிழா 3.0 சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை கன்றுகளை இன்று திருச்சி துவாக்குடி தேவராயநேரி பகுதியில் நடப்பட்டது.

Advertisement

இதுகுறித்து Shine TREEchy அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் தர்மரிடம் பேசினோம்…. “கஜா புயலால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்காக எங்களின் சிறு உதவியாக இந்த தென்னங்கன்றுகளை வழங்கி வருகிறோம்.ஏற்கனவே இரண்டு இடங்களில் சுமார் 150 தென்னங்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்டமாக இப்போது திருச்சி தேவராயனேரி பகுதியில் 50 மரக்கன்றுகளை இன்று நட்டு வைத்தோம். தொடர்ந்து அடுத்த கட்டமாக இப்பணிகளை செய்து வருவோம்” என்றார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *