தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 8 காவல் பயிற்சி பள்ளிகளில் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 350 காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற நேற்று பயிற்சி மையத்திற்கு வந்த காவலர்களுக்கு பயிற்சி பள்ளி முதல்வர் பாரதிதாசன் தலைமையில் இனிப்பு கொடுத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதில் பயிற்சி பள்ளி காவல் ஆய்வாளர் சித்ரா, பள்ளி உதவி ஆய்வாளர் ஜவஹர், பிரான்சிஸ் மேரி மற்றும் காவலர்கள் புதிதாக பயிற்சி பெற வந்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments