திருச்சி மேலப்புலிவார்டு ரோடு பழைய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே உள்ள சாலையின் நடுவில் மிகப்பெரிய அளவில் பள்ளம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதுடன், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்தனர். இது குறித்து திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்திய அந்த பள்ளத்தை மாநகராட்சியினர் சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதைப் போன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள சப் ஜெயில் ரோட்டில் பாதாள சாக்கடை பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் நிறைவுற்ற பின் அந்த சாலை மணல், ஜல்லி ஆகியவை மட்டுமே இருந்ததால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்களால் புழுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்குள்ள வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து திருச்சி விஷன் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக புதிய தார் சாலை அமைத்துள்ளது. இதனால் வணிகர்களும், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்டு உடனடி தீர்வு கண்ட திருச்சி விஷன் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
Comments