திமுக ஆட்சியில் போக்குவரத்து துறையின் அவலங்களை எடுத்துக் கூறும் துண்டு பிரசுரங்களை, அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களிடம் வீதி, வீதியாக சென்று வழங்கினர்.
அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜெகதீசன் ஏற்பாட்டில், அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கிய சலுகைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லும் வகையிலும், தற்போதைய திமுக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகங்களை எடுத்துச் சொல்லும் வகையிலும், அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில், அண்ணா தொழிற்சங்கத்தினர் வழங்கினர்.
இதில், அதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதிகழகச் செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments