திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அதே பகுதியில் காலை நேர டிபன் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் தினமும் 100 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி. இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்தபோது கடை அருகே சாலையில் பச்சை நிற காகிதப்பை இருந்தது. ராஜேஸ்வரி அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தார்.
அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைக் கண்ட ராஜேஸ்வரி சிறிதும் தாமதிக்காமல் கடை உரிமையாளர் பிரபாகரனிடம் இது குறித்து கூறி பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறினார். உடனே இருவரும் பணத்துடன் அங்கிருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசாரிடம் சாலையில் கடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை கொடுத்து அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த வடக்கு காவல் துணை ஆணையர் அன்பு அங்கு வந்து பணத்தை ஒப்படைத்த ராஜேஸ்வரி நேர்மையை பாராட்டினார். மேலும் பணம் கிடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments