திருச்சி விமான நிலையத்திற்கு துபையிலிருந்து இலங்கை வழியாக வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவரின் உடைமை சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் மறைத்து வைத்து எடுத்து வந்த 318.500 கிராம் எடையுள்ள தங்க உருளை குச்சிகளளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதிப்பு ரூ. 19 லட்சத்து 12 ஆயிரத்து 274 என தெரிவித்தனர். தங்கத்தை பறிமுதல் செய்து பெண்ணிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

13 Jun, 2025
378
20 June, 2023










Comments