Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பெண்கள் உரிமைத் தொகை முதலில் அறிவித்தது மக்கள் நீதி மய்யம் – ஸ்ரீரங்கத்தில் கமலஹாசன் பேச்சு

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு ஆதரவு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்…. நான் தற்போது இந்த இடத்திற்கு வந்து நிற்க வேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்றால் தேசம் தேசபக்தி அரசு என்ன என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். தேசபக்தி என்பது பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியது.

தேசம் என்பது பாரபட்சம் இல்லாமல் அனைத்து மொழிகளையும் பாரபட்சமில்லாமல் பேசி மகிழ்ந்திருப்பது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லாத மாநிலம் என்றால் அது தமிழகம் மட்டும் தான். அதிலும் திருச்சி மாநகரில் இதுவரை அப்படிப்பட்ட எந்த ஒரு மதக்கலவரங்களும் இதுவரை நடந்ததில்லை. இதுவே ஒரு நல்ல அரசு நல்ல நிர்வாகம் நல்ல அரசியல் நடைபெறுகிறது என்பதற்கான அடையாளம். நான் இங்கு வந்து நிற்பது சீட்டுக்காக அல்ல நாட்டுக்காக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எனக்கு இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.

நான் கஷ்டப்படும் நேரத்தில் வீட்டு சாவியை என் கையில் கொடுத்து என்னுடைய துயரை நீக்கியவர்கள் இந்த தமிழ்நாட்டு மக்கள் அவர்கள் மனதில் எனக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு ஏனென்றால் இது சாதாரண காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது. அதே போல் தான் என்னுடைய காதலும் உங்கள் அனைவர் மீதும் உள்ளது. அந்த அன்புக்கு நான் இதுவரை கைமாறு செய்யவில்லை. அப்படிப்பட்ட கைமாறு செய்வதற்காகவே நான் தற்போது இங்கு வந்து நிற்கிறேன். நான் எனக்கு சீட்டு கேட்கவில்லை என் தம்பிகளுக்கு சீட்டு கேட்கிறேன் என்றார். 1920 இல் ஜஸ்டிஸ் கட்சியால் தொடங்கப்பட்டது தான் இந்த மதிய உணவுத் திட்டம். அந்த கட்சி ஆட்சியில் இல்லாததால் அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. ஆனால் அதை கவனித்துப் பார்த்த காமராஜர் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினார். அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் அதைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்ந்து முன்னோக்கி சென்றாலும் நம்முடைய முதல்வர் அதோடு காலை உணவுத் திட்டத்தையும் சேர்த்து வழங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வருவதற்கு மிக முக்கிய காரணம் அதோ எனக்கு பின்னால் ஒரு பெரியவர் சிலையாக அங்கு அமர்ந்திருக்கிறார் அவரால் தான் இன்று நாம் தோளோடு தோல் உரசி நின்று கொண்டிருக்கிறோம். அவரைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும், முயற்சியும், திட்டமும் தான் இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவரிடமிருந்து தான் நாம் சமத்துவத்தைப் பெற்றுக் கொண்டோம். எனவே அவர்களைப் போன்றவர்களை நாம் வணங்கவில்லை என்றாலும் பரவாயில்லை மறக்காமல் இருக்க வேண்டும் அவர்களுக்கு நாம் கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றைய தமிழக முதல்வர் எந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 12 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய பேருந்து நிலையத்தை அமைக்க அறிவித்துள்ளார். 380 கோடி செலவில் ஒரு மாபெரும் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. 126 கோடி ரூபாய் செலவில், 174 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அநேக திட்டங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது செய்து வருகிற திட்டங்கள்.

அதேபோல் நாம் வரியாக கட்டும் ஒரு ரூபாயிலிருந்து 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு நமக்கு திருப்பி கொடுக்கிறது அந்த பணத்திலிருந்து தான் இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் ஒரு ரூபாயையும் நமக்கு திருப்பிக் கொடுத்தால் இன்னும் அநேக திட்டங்களை நாம் செயல்படுத்திட முடியும். அதேபோல் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடிய மகளிர் உரிமை திட்டம் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் போன்றவற்றை இந்திய அளவில் நாம் செயல்படுத்தினால் எத்தனையோ பல கோடி பெண்கள் பயனடைந்தார்கள். இந்த மகளிருக்கான உரிமை தொகை திட்டம் என்பது மக்கள் நீதி மையத்தின் உடைய திட்டங்களில் ஒன்று. ஆனால் அதை கிண்டல் அடிக்காமல் நம்முடைய முதல்வர் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார். எனவே அதற்காகவே இன்று நான் இங்கு வந்து நிற்கிறேன்.

இது ஒரு திராவிட மாடல் இந்த மாடலை நாடு முழுவதும் பின்பற்றினால் இந்தியாவின் வளர்ச்சி மிக அசுர வளர்ச்சியாக மாறும் ஏனென்றால் இது ஒரு பன்முகத்தன்மை கொண்ட திராவிட மாடல் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிற்பது வைணவம் நனைந்த ஈரம் இன்னும் காயாமல் அதற்கென ஒரு இடம் கொடுத்தது இந்த திருச்சி மாநகரம் தான் அவர்கள் தமிழர்களை பார்த்து கேட்கிறார்கள் தேசிய நீரோட்டத்தில் அவர்கள் ஒருபோதும் இணைய மாட்டார்களா என்று ஆனால் இங்குதான் நேரு ஜவர்கலால் நேரு ராஜாஜி காமராஜர் பெரியார் போன்ற எண்ணற்றவர்கள்தேசிய நீரோட்டத்தில் அங்கம் வகித்தார்கள் அவர்களுடைய பெயரில் இன்னும் அநேகர் அங்கம் வகிக்கிறார்கள் நம்மை விட வேறு யார் இந்த தேசிய நீரோட்டத்தில் தடம் பதித்து விட முடியும். எனவே நான் அந்த பாசிச பாஜகவினருக்கு சொல்வது நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க பழகுங்கள்.

மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து குரல் கொடுத்த ஊர் தான் இந்த திருச்சி மாநகரம் 1757இல் பாயாக இருந்த மருதநாயகம் மதுரையின் மன்னனாக மாறி கட்டபொம்மன் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னரே இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் விதிக்கும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் எனவே தான் அவரை நான்கு துண்டுகளாக வெட்டி அவருடைய தலையை பொதுமக்களின் பார்வைக்காக பொதுவெளியில் வைத்த இடம் இந்த திருச்சி அதேபோல் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக காந்தி மட்டுமல்ல அநேக மூதாதையர்கள் போராடி இருக்கிறார்கள் ஆனால் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள் எழுந்து முதலில் நடங்கள் என்று சொன்னவர் காந்தி எனவே தான் அவருடைய பெயர் முதலில் சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரராக என்றும் நாம் பேசி வருகிறோம்.

பல நேரங்களில் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை வருமான வரித்துறை என்ற அமைப்புகளை வேட்டை நாயை போல பயன்படுத்துகிறது நான் ஒழுங்காக வரி கட்டுகிறவன் இதுவரை அவர்கள் எனக்காக வேலை பார்த்தார்கள் ஆனால் இன்று அவர்களுக்கு வீட்டு வேட்டை நாய்களாக மாறிவிட்டார்கள். அதேபோல் முதல்வர்கள் கைது என்பது பாஜக நினைக்கிறது நாம் முதல்வரை கைது செய்து விட்டோம் என்று அந்த முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் வாக்காளர்களும் பொதுமக்களும் ஆகிய நீங்கள் தான் அப்படி என்றால் அவர்கள் 100 கோடி மக்களை எதிர்க்கிறார்கள் கைது செய்ய துடிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கு ஆனால் அதை கண்ணில் தான் காண முடியவில்லை. இவர்கள் சுடும் வடையை தின்றால் ஒருபோதும் பசி ஆறாது அதற்கு காரணம் அவர்கள் வாயால் மட்டுமே வடை சுட்டு வருகின்றனர்.

உலக அரங்கில் இருக்கக்கூடிய நாடுகளில் அரசியலும் மதமும் கலந்த நாடு ஒருபோதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. எனக்கு இதோ இங்க நிற்கிற மனிதர்களாகிய நீங்கள் தான் என்னுடைய மதம். எனவே அரசியல் வேறு மதம் என்பது வேறு மதம் என்பது என்னுடைய தனிப்பட்ட ஒரு விருப்பம் ஆனால் அரசியல் என்பது பொது நலம் கலந்தது அது எப்போதுமே பொதுவானது என்பதை நீங்கள் உணர்ந்து நம்முடைய குரலாக பாராளுமன்றத்தில் ஒழிக்கப் போகும் அதிமுகவின் வேட்பாளர் துரை வைகோவிற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *