Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சர்க்கரை நோயாளிகள் இரத்த நாளங்கள் அடைப்பை நீக்க உலகிலேயே முதல் முறையாக ஊசி திருச்சியில் ஒரு நோயாளிக்கு போடப்படுகிறது – திருச்சி மருத்துவர் பேட்டி

மங்களூர் மணிபால் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் Cipla மருந்து கம்பெனி இணைந்து 10 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி மூலம் அறிமுகமான நவீன ஸ்டெம்செல் சிகிச்சையை இந்தியாவில் அரசு அங்கீகரித்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

புகைபிடிப்போர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களின் ரத்த ஓட்டம் பாதித்து  amputation (காலை  வெட்டி எடுக்க) அவசியம் இன்றி புதிய ரத்த நாளங்களை உருவாக்கி( Angiogenesis) காப்பாற்ற கூடியது. இது இளவயதினரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுத்து பலமடங்கு வளர்த்து ஒரு குப்பியில் 150 & 200 மில்லியன் செல்களாக 2 வித doses ஆக விற்கப்படுகிறது. நோயாளியின் உடல் எடை பொறுத்து மாறுபடும். 

இது (vaccine)  தடுப்பூசி போல ஐஸ் பெட்டியில் வைத்து அனுப்பப்படும். நோயாளிக்கு ஊசி போடும் முன் room temperatureக்கு கொண்டு வர வேண்டும். அடைபட்ட ரத்த நாளங்களில் byepass , stent போட முடியாத நோயாளிகளுக்கு காலை அகற்றாமல் காப்பாற்ற கூடியது என்று ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல மூட்டு தேய்ந்தவர்களுக்கு stemcell சிகிச்சைக்கு அங்கீகாரம் பெற அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. 

இதனால் மரபணு மாற்றம் stemcell சிகிச்சையில் இந்தியா முன்னணியில் உள்ளது.இந்த சிகிச்சை இந்தியாவிலும், உலகிலேயும் முதல் முறையாக திருச்சி (மாருதி) தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிக்கு அளிக்கப்பட உள்ளது என மாருதி மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவி தெரிவித்தார்.

இந்த ஊசியின் விலை இரண்டு லட்ச ரூபாய் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிறுவன மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இந்த ஊசியினை செலுத்தி கொள்ள முடியும். இந்த ஊசியை செலுத்தி கொள்ள விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *