புதுக்கோட்டை மாவட்டம்,சரளபட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண் மணப்பாறையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு வந்த பொழுது வேலூரில் இருந்து ஒரு ஆண் இவரது மொபைலுக்கு தவறுதலாக போன் செய்துள்ளார். இதனால் இருவரிடமும் பழக்கமானது.
நாளடைவில் காதலாகி அந்த நபருடன் இந்த பெண் கடந்த ஏப்ரல் மாதம்1ஆம் தேதி வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஆண் நண்பர் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூரில் அவருக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ரூமில் இந்தப் பெண்ணை தங்க வைத்து பாலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தாய் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் பெண்ணின் மொபைல் எண்ணை கொண்டு மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது.
இந்த பெண்ணையும் உடனிருந்த ரியாஸ்கான் (32), சதாம் (28) இருவரையும் கைது செய்துள்ளனர் பின்னர் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற முபாரக் அலி (28) வேலூரைச் சேர்ந்த நபரையும் கைது செய்தனர். மூன்று பேரும் சேர்ந்து இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானதையடுத்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .இந்த மூன்று குற்றவாளிகளையும் திருச்சி மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி முபாரக் அலிக்கும், நேற்று நியாஸ் மற்றும் சதாம் ஆகிய இருவர் மீதும் மணப்பாறை போலீஸார் குண்டாஸ் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments