திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் 300 ஆண்டுகளுக்கு பின் பெருமாள் கோவிலில் நடந்த தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ளது அருள்மிகு பங்கஜா நாயகி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோயிலாக விளங்கி வருகிறது.கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழாக் காலங்களில் இக்கோவிலின் தென்புறத்தில் உள்ள குளத்தில் தெப்ப உற்ச வம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தெப்ப உற்சவம் நடை பெற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் முடிவெடுத்து கோவிலின் உள்பிரகா ரத்தில் உள்ள புதர் மண்டி கிடந்த ஷீர புஷ்கர்னி குளத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடை பெற்றது.இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மின் மோட்டார் மூலம் தெப்பத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்துதெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.இதை யொட்டி முதல் நாள் யாகசாலை பூஜை நடைபெற்றது.நேற்று இரவு அனந்த தாயார் மண்டபத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கேடயத்தில் பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.

அதைத்தொடர்ந்து இர வில்பெருமாள்தாயார் தெப்பத்தேரில் எழுந்தருளினர்.மேள தாளங்கள் முழங்க தெப்பத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 300 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம் நடைப்பெற்றதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெரு மாளை தரிசனம் செய்தனர். பின்னர் தெப்பத்திலிருந்து பெருமாள் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கிழக்கு வாசல் வழியாக கோவிலை சென்றடைந்தார். அங்கு பெருமாள்தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மண் ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
13 Jun, 2025
388
24 February, 2025










Comments