திவ்யதேசங்களில் 2வதான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்போற்சவம் – பக்தர்கள் தாயாரை பக்தி பரவசத்துடன் தரிசனம்.
108திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், திருமணத்தடை நீங்க திருவருள்புரியும் திருச்சி உறையூர் கமலவல்லிதாயார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.சிறப்புவாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா 7நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 19-ம்தேதி தொடங்கிய தெப்பத்திருவிழாவின் 6ம்நாளான இன்று கமலவல்லிதாயாரின் தெப்போற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று இரவு சாய்ந்த கொண்டையணிந்து, கிளிமாலை, மார்பில் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் சூட்டியவாறு வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவைசாதித்த பின்னர், உள்பிரகாரங்களில் உலாவந்த கமலவல்லிதாயார், அதன்பின்னர் ஆலய தீர்த்தக்குளத்தில் வண்ணமிகு மின்விளக்குகளாலும், பூக்களைக் கொண்டும் எழிலுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கமலவல்லி தாயார் தெப்பத்தில் எழுந்தருளிய கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று கண்டு சேவித்துச் சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments