திருச்சி ஸ்ரீரங்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் டிப்ளமோ முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட ஆன்லைன்
கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் போது நிரப்பப்பட்ட
இடங்கள் போக மீதம் காலியிடங்கள் உள்ளன.
எனவே தற்போது சேர விருப்பமுள்ள மாணவ மாணவியர்கள் விண்ணப்பம் 30.09.2021க்குள் கல்லூரிக்கு நேரில் வந்து சேர்க்கைக்கான கட்டணம் ரூ.150/-ஐ செலுத்தி, மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் மாணவர்கள் சேர்க்கை கல்வி
கட்டணங்கள், கல்லூரி வங்கி கணக்கு எண் மற்றும் இதர தகவல்களை
கல்லூரியின் இணையதள முகவரி www.gptcsrirangam.com-ல்
பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments