சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய முறையின் படி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் மீதமுள்ள 50% பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் JEE மெயின்ஸ் மதிப்பெண் ஆகியவற்றிற்கு சம மதிப்பு அளிக்கப்படும்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கென சாஸ்தரா தனி நுழைவுத் தேர்வு எதனையும் நடத்ததாது. மாணவர்கள் தங்களது 12ஆம் வகுப்பு மதிப்பெண் கிடைக்கப் பெற்றதும், ஆன்லைன் மூலம் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தரவரிசைப் பட்டியல் ஜூலை 31ம் தேதி இரவு 9 மணிக்கு வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்க உள்ளது தஞ்சாவூர் மற்றும் திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு 30 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் www.sastra.edu என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments