திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணா சார்வின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1984 திறந்து வைத்தார்.
இந்த சிலைக்கு திமுகவினர் அவ்வப்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாரோ அண்ணாசிலைக்கு நெற்றியில் குங்குமம் பூசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி திமுக கவுன்சிலர் முருகானந்தம், வட்டச் செயலாளர் தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலை முன்பு திரண்டனர். பின்னர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக குங்குமத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சிலைக்கு பூட்டு போடப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments