திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 61 முதல் 65 வரை வார்டு பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஓயாமாரி மயானம் அருகே நெடுஞ்சாலை துறை மூலம் தாங்கு சுவர் கட்டும் பணி மேற்கொள்ளும் பொழுது, மண் சரிவு ஏற்பட்டதால், அவ்விடத்தில் செல்லும் குடிநீர் உந்து குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதால் நாளை (01.04.2021) குடிநீர் விநியோகம் இருக்காது,
இப்பணி முடிவடைந்தவுடன் 02.04.2021 வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொள்கிறார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments