திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி குளித்தலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்த பொழுது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் கோபி காருடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த முகமது அலி மகன் காதர் முகைதீன் (28), முகமது இப்ராஹிம் மகன் முகமது ராசி (25), காஜா மகன் ரிஸ்வான் (27), கர்ணன் மகன் பிரியன் (21) ஆகிய நான்கு பேரும் காரில் கஞ்சா கடத்தி வந்ததும் காரில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் நால்வரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கடத்திவரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 23 November, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments