Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சென்னை சில்க் முன் சிலிண்டர் வெடித்து ரவுடி பலி – 22 பேர் காயம் – பதட்டம்

திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே சென்னை சில்க்ஸ் துணிக்கடை முன்புஇருசக்கர வாகனத்தில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து உத்தர பிரதேசமத்தைச் சேர்ந்த அனார் சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலிண்டர் அருகே நின்ற கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கரட்டான் காடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்ற மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோவை அருகே நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்ற ஆட்டோ ஓட்டுநர் வரகனேரி பகுதியை சேர்ந்த மன்சூர் என்பவரின் ஆட்டோ முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 13 வயது ஜீவானந்தம் பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் ஏழு பெண்கள் மூன்று குழந்தைகள் ஐந்து ஆண்கள் உட்பட 15 நபர்களும், பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரன் (36), மகேஷ் (21), சிவாஜி (28) உள்ளிட்ட மூவரும், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சில்வியா(23), பிரியா(22), கவியரசு(26), ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அனார் சிங்(31) என்ற வட மாநில பலூன் வியாபாரியை தேடி வருகின்றனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், விபத்து ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து, விபத்து குறித்து கேட்டறிந்தார். 

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்.., 13 வயது பையன் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இது போன்ற ஹீலியம் கேஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி இல்லை.., மேலும் இது போல் யாரேனும் உரிய அனுமதி இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டால் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விபத்தில் உயிரிழந்த ரவி மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் முற்றிலும் விபத்து மட்டுமே வேறு ஏதேனும் சதி நடைபெறவில்லை எனக் கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *