இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை வெளியீடு செய்யப்பட்டு
அதன்பேரில், தமிழக சட்டமன்ற தேர்தல்-2021 எதிர்வரும் 06.04.2021 அன்று நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நேர்மையாகவும், சிறப்புற நடைபெறும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்தல் பணிக்கு அனைத்து துறைகளிலும் இருந்து அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்கனவே 21.03.2021 மற்றும் 27.03.2021 ஆகிய இரண்டு தினங்களிலும் தொகுதி வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
மேற்படி இரண்டு பயிற்சி வகுப்புகளின் போதும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் மாவட்ட
நிர்வாகத்திற்கு நல்ஒத்துழைப்பு நல்கி பலரும் தாமாக முன்வந்து கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியராகிய நான் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மாவட்ட நிர்வாகத்தால் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு அனைத்து பயிற்சி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டும்.
ஆகவே, இதுவரை தடுப்பூசி போட்டுக்
கொள்ளாத அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் எதிர் வரும் 03.04.2021 அன்று நடைபெறவுள்ள மறு மற்றும் புத்தாக்க பயிற்சி வகுப்பின் போது நாட்டு நலன், சமூக நலனோடு தங்களது மற்றும் தங்களது குடும்ப நலனில் அக்கறை கொண்டு தவறாமல் கோவிட்-19
தடுப்பூசி போட்டுக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments