Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சியில் தொடர் மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் 

திருச்சி மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிக்காக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.25 ஆயிரம் ஏக்கர் பருத்தி ,37 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம், 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

 தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நெல் நடவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் கூறியதாவது,

“அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், லால்குடி, கொடியாலம், புலிவலம், சாத்தனூர், மருதாண்டகுறிச்சி, திருப்பராய்த்துறை, அணலைப் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அவற்றுள் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மட்டும் மழையால் 300 ஏக்கர் வாழை பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோல்தான் அந்தநல்லூர் திருவெரும்பூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 600 ஏக்கர் நெல் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் செல்லும் பாதைகள் ஆகாயத்தாமரை செடிகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் நீரானது வெளியே செல்ல வழியில்லாமல் உள்ளது.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பயிர் பாதிப்புகளை கணக்கிட கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது மூன்றாவது முறையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 20,000 வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *