நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட நியூ காட்டூர் வசித்து வரும் சுபாஷினி என்பவர் தனது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் வீட்டிற்கு சென்று சோதனை

செய்ததில் 1360 கிராம் ₹ 13600 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கஞ்சா போதை பொருள் விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துநீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நியூ காட்டூர்  சுடுகாடு முன்பு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் பவித்ரன் ராம்ஜி நகர் மற்றும் சுந்தர்ராஜ் ராம்ஜி நகர் ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கஞ்சா போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
5.880 kg கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது இதன் மதிப்பு 58,800 ஆகும். இது போன்ற அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை,போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மதி மயக்கும் பிற போதை
வஸ்துக்களை விற்பனை, போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 8939146100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது தகவல் கொடுப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 18 May, 2025
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments