திருவெறும்பூர் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
அடிப்படையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பதற்காக வைத்திருந்த அரியமங்கலம் மலையப்பநகர் சேர்ந்த மனோகர் (70 ), திருவனைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் காவியதர்சன் (20),
குவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மருதை மகன் ஜெய அயனந்த் (20) ஆகிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 20 கிராம் எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட் 113 ,கூலிப் 13, விமல்பாக்கு 300, டொபாக்கோ 300பாக்கெட், விற்ற பணம் ரூ 1500, இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன், ஒரு பைக், ஒரு மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அவர்கள் மூன்று பேரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments