திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவதாக டெல்லியில் உள்ள குழந்தை தொழிலாளர் மீட்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் பாலக்கரை காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் அந்த நிறுவனங்களில் சோதனை மேற்கொண்ட போது திருச்சி காஜாமலை சேர்ந்த 16 வயது சிறுவன், பாலக்கரை துரைசாமி புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், மாசசிங்பேட்டை பகுதியில் பஞ்சர் கடை ஒன்றில் வேலை செய்து ராம்ஜிநகரை சேர்ந்த 15 வயது சிறுவனை ஆகிய 3 சிறுவர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக மூன்று நிறுவனங்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments