கிறிஸ்தவமக்கள் இறந்த தங்களது உறவினர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம்தேதி கல்லறைத்திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் தங்களது உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்கு வர்ணம் பூசி, மலர்களாலும் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்வர்.
திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ கல்லறைத்தோட்டத்தில் இறந்த உற்றார், உறவினர், நண்பர்களின் கல்லறையில் கிறிஸ்தவமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மனமுருகி பிரர்த்தனை செய்தனர். மரித்த தங்களது முன்னோர்கள் ஆசிர்வாதம் கிட்டுவதோடு,
மீண்டும் இப்புவியில் அவதரிப்பார்கள் என்ற நோக்கில் தங்களது பிரர்த்தனை மேற்கொண்டு கொண்டாடுவதாக தெரிவித்தனர். மேலும் கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments